வாவ்...உலகின் மிக நீண்ட பாலம்... சீனாவில் இன்று திறப்பு...

Webdunia
செவ்வாய், 23 அக்டோபர் 2018 (16:13 IST)
உலகில் மிக நீண்ட என்ற சொல்லைத்தாங்கி வரும் நாடுகளுக்கு என்றுமே தனி சிறப்பு உண்டு: அது அனைவராலும் அதிகம் கவனிக்கப்படும். அந்த வகையில் தற்போது சீனாவில் மிக நீண்ட தூர கடல் பாலத்தை அமைத்து சீனா பெருமை பெற்றிருகிறது.  
உலகின் நீளமான கடல் பாலத்தை இன்று சீனா திறக்க இருக்கிறது. இருபது பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஒன்பது ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த இந்த பாலம் ஹாங்காங்கையும் சீனாவையும் இணைக்கிறது. சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார் என நம்பப்படுகிறது. பெரும் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தை விமர்சகர்கள் ’வெள்ளை யானை’ என்று அழைக்கிறார்கள்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்