உலகின் மிகப்பெரிய தொங்கு நடைபாலம். மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (05:02 IST)
மக்கள் பயன்பாட்டிற்காக சுவிஸ் நாட்டில் கட்டப்பட்டு வந்த உலகின் மிகப்பெரிய தொங்கு நடைபாலம் நேற்று திறக்கப்பட்டது. சுவிஸ் நாட்டின் கிராச்சென் மற்றும் ஜெர்மட் நகரங்களை உருவாக்கும் வகையில் அந்நாட்டு அரசு கட்டியுள்ள இந்த நடைபாலம் கடல் மட்டத்தில் இருந்து 85 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.



 
 
எனவே  இது தான் உலகின் மிகப்பெரிய நடை மேம்பாலம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த நடைபாலம் பூமியதிர்ச்சி உள்பட எந்த ஒரு அதிர்வையும் தாங்கும் சக்தி கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
1621அடி நீளமுள்ள இந்த நடைபாதையில் சுவிஸ் நாட்டு மக்களும், சுற்றுலா பயணிகளும் நேற்று பயன்படுத்தினர். இதில் நடந்து போகும்போது த்ரில்லான அனுபவங்கள் ஏற்பட்டதாக அவர்கள் கூறினர். சிலர் உயரமான பாலத்தில் இருந்து கீழே பார்க்க பயமாக இருந்ததாகவும், அதனால் கண்களை மூடிக்கொண்டதாகவும் தெரிவித்தனர்.
அடுத்த கட்டுரையில்