கமல், உங்கள் முதுகுல அவங்க சவாரி செய்ய பாக்குறங்க! ஜாக்கிரதை: குஷ்பு எச்சரிக்கை

Webdunia
திங்கள், 31 ஜூலை 2017 (23:51 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் அதிமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். ஆனால் அதிமுகவுக்கு இணையான ஊழல் கட்சிதான் திமுக. இங்கும் ஒரே ஒரு குடும்பம்தான் கோடிகோடியாக பணம் சம்பாதித்துள்ளது.



 
 
ஆனால் அதிமுகவின் ஊழலை அம்பலப்படுத்தும் கமல், திமுகவின் ஊழலை கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மேலும் திமுகவின் 'முரசொலி' விழாவிலும் கலந்து கொள்ள ஒப்புக்கொண்டுள்ளார். கமலின் செல்வாக்கை திமுக பயன்படுத்த முயற்சிப்பதாகவும், கமல் இதில் சுதாரிப்பாக இருக்க வேண்டும் என்றும் ஒருசிலர் எச்சரித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளருமான குஷ்பு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியபோது, 'எனது நண்பரே, உறுதியாய் இருங்கள். உங்களை நினைத்து நான் பெருமைய அடைகிறேன். ஒருசில அமைப்புகளும், செல்வாக்கு இழந்த சில அரசியல் தரப்பும், 2 நிமிட புகழ் வெளிச்சத்துக்காக உங்கள் தோளில் சவாரி செய்ய முயற்சிக்கலாம்.
 
நீங்கள் உங்கள் நிலையில் சரியாய் இருக்கின்றீர்கள். எப்போதும் உங்களுக்கு என்னுடைய ஆதரவு உண்டு. நான் உங்கள் பக்கம் என்றென்றும் நிற்பேன். சிறந்த மாற்றத்துக்கான உங்கள் போராட்டத்தை தடுக்க எவற்றையும் அனுமதிக்க வேண்டாம்' என்று குஷ்பு பதிவு செய்துள்ளார். குஷ்பு இந்த கருத்தை திமுகவை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் டுவிட்டரில் கருத்து கூறி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்