உலகளவில் கொரோனா தொற்று: பாதிப்பு 2.51 கோடி, குணமடைந்தோர் 1.74 கோடி

Webdunia
ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (06:56 IST)
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.51 கோடியாக அதிகரித்தாலும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.74 கோடியாக உயர்ந்துள்ளதால் கொரோனா குறித்த அச்சம் மக்களிடையே கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. அதே நேரத்தில் உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8.45 லட்சமாக அதிகரித்துள்ளது மட்டும் சற்று அச்சத்தை தருகிறது
 
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் மட்டும் 6,139,078 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 186,855 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,846,965 என்பதும், பலியானவர்கள் எண்ணிக்கை 120,498 என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
அதேபோல் கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,539,712 என்பதும் பலியானவர்கள் எண்ணிக்கை 63,657என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
அமெரிக்கா, பிரேசில், இந்தியாவை அடுத்து ரஷ்யா, பெரு, தென்னாப்பிரிக்கா, கொலம்பியா, மெக்சிகோ, ஸ்பெயின் மற்றும் சிலி ஆகிய நாடுகள் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் 10 நாடுகள் ஆகும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்