பாதிப்பு 2.46 கோடி, பலி எண்ணிக்கை 8.35 லட்சம்: உலக கொரோனா நிலவரம்

Webdunia
வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (07:22 IST)
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.46 கோடியாக உயர்ந்துள்ளது என்பதும், அதாவது 24,611,977 ஆக உள்ளது என்பதும், உலக அளவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 8.35 லட்சமாக உயர்ந்துள்ளது என்பதும் அதாவது 835,309ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 17,080,863 கோடியாக உயர்ந்துள்ளது
 
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 60 லட்சமாக உள்ளது. அதாவது அமெரிக்காவில் மட்டும் 6,046,634 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 184,796பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,764,493என்பதும், பலியானவர்கள் எண்ணிக்கை 118,726 என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,384,575 என்பதும் பலியானவர்கள் எண்ணிக்கை 61,694 என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 76826  பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதும், 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1023 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்