பெண்கள் பொதுவெளியில் பாட கூடாது: தலிபான்களின் புதிய சட்டம்..!

Mahendran
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (12:43 IST)
ஆப்கானிஸ்தான் தாலிபான் அரசு ஏற்கனவே பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் வைத்துள்ள நிலையில் தற்போது பொதுவெளியில் பாடல் பாடக்கூடாது என்று புதிய சட்டத்தை அமல்படுத்தி இருப்பது அந்நாட்டில் பெண்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தாலிபான் ஆட்சி வந்ததிலிருந்து பெண்களுக்கான பல உரிமைகள் பறிக்கப்பட்டன. குறிப்பாக பெண்கள் கல்லூரிகளில் மேற்படிப்பு படிக்க கூடாது என்றும் வேலைக்கு செல்லக்கூடாது என்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. விளையாட்டுத் துறையில் பெண்கள் ஈடுபடக்கூடாது என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் பெண்கள் பொது இடங்களில் சத்தமாக பேசக்கூடாது, பாடல் பாடக்கூடாது என்று புதிய சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. பெண்கள் தனியாகவோ உறவு முறை அல்லாத ஆண்களுடனும் பயணம் செய்யக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ள புதிய சட்டத்திற்கு ஐநா ஏற்கனவே அதிருப்தி தெரிவித்த நிலையில் தற்போது பாடவும் தடை விதித்துள்ளதை அடுத்து உலக நாடுகள் தாலிபான் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்