மகளிர் உரிமைத் தொகைக்கு இன்று விண்ணப்பித்தால் உடனே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற வதந்தி பரவியதை அடுத்து திருச்சி, விழுப்புரம், விருதுநகர், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பெண்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் ஆகஸ்ட் 17, 19, 20 ஆகிய தேதிகளில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறுவதாக வாட்ஸ் அப் மூலம் வதந்தி ஒன்று பரவியது. இதனை நம்பி ஏராளமான பெண்கள் திருவாரூர், திருச்சி, விருதுநகர், மதுரை, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகங்களில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இது பொய்யான தகவல் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனர். அரசுத் திட்டங்கள் குறித்து தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.