கொரோனா மனித குலத்தின் எதிரி: புதிய பெயர் சூட்டிய உலக சுகாதார அமைப்பு

Webdunia
வியாழன், 19 மார்ச் 2020 (18:37 IST)
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு ‘மனித குலத்தின் எதிரி’ என்ற கூடுதல் பெயரை சேர்த்துள்ளது உலக சுகாதார அமைப்பு.

சீனாவில் தொடங்கி உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவும் வேகத்துக்கு இணையாக அதன் பெயரும் நீண்டு கொண்டே செல்கிறது. ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் என்றே அழைக்கப்பட்டு வந்த இந்த வைரஸ் பிற்கு உலக சுகாதார அமைப்பால் ‘நாவல் கொரோனா’ என்று அழைக்கப்பட்டது. பிறகு அதன் தாக்கம் குறித்து குறிப்பிடும் வகையில் “கோவிட்-19” என்று மாற்றப்பட்டது.

பிறகு உலக நாடுகள் முழுவதும் பரவியதால் அபாயகரமான வைரஸ் என்பதை குறிக்கும் வகையில் ‘கோவிட் 19 பேண்டமிக்’ என்று விரிவாக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மனித இனத்துக்கே இது ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என குறிக்கும் வகையில் ‘கோவிட் 19 பேண்டமிக் எனிமி அகெய்ன்ஸ்ட் ஹுமானிட்டி (மனித குல எதிரி)’ என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்