9 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பலி: சீனாவை தாண்டிய இத்தாலி!

வியாழன், 19 மார்ச் 2020 (16:58 IST)
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது சீனாவில் வைரஸ் பரவுதல் குறைந்திருந்தாலும் இத்தாலி மற்றும் ஈரானில் மிக வேகமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 149 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உலகளவில் உயிரிழப்பு 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சுமார் இரண்டு லட்சத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு ஏற்படும் இறப்பு வீதத்தை ஒப்பிடுகையில் சீனாவை விட இத்தாலியிலும், ஈரானிலும் இறப்பு வீதம் மிக வேகமாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த டிசம்பர் தொடங்கி சீனாவில் இதுவரை 3,130 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த மாத தொடக்கத்தில் கொரோனாவை எதிர்கொள்ள தொடங்கிய இத்தாலியில் ஒரு மாத காலத்திற்குள் 2,978 பேர் இறந்துள்ளனர். சீனாவை ஒப்பிடுகையில் இத்தாலியில் இறப்பு விகிதம் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

மேலும் இத்தாலியில் பாதிக்கப்படுபவர்களை அனுமதிக்க போதிய அளவு படுக்கைகள் இல்லாததால் 80 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதை தவிர்ப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்