மோடியை கேள்வி கேட்ட பத்திரிகையாளரை ட்ரோல் செய்த நெட்டிசன்கள்: வெள்ளை மாளிகை கண்டனம்..!

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2023 (12:47 IST)
பிரதமர் மோடியை கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளர் இணையதளங்களில் ட்ரோல் செய்யப்படுவதை அடுத்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. 
 
பிரதமர் மோடி சமீபத்தில் அமெரிக்கா சென்றபோது பெண் பத்திரிகையாளர் ஒருவர் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு குறித்த கேள்வியை கேட்டார். 
 
அப்போது அவருக்கு பிரதமர் மோடி பதில் கூறியபோது, ‘இந்தியா ஜனநாயக நாடு, எங்கள் நாட்டின் நரம்புகளில் ஜனநாயகம் உள்ளது, நாங்கள் ஜனநாயகத்தை சுவாசித்துக் கொண்டே வாழுகிறோம், இந்தியாவில் பாகுபாடு என்ற பேச்சுக்கு இடமில்லை என்று தெரிவித்தார். 
 
இந்த நிலையில் சிறுபான்மையிருக்கு எதிரான பாகுபாடு குறித்து கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளரை இணையதளங்களில் பலர் ட்ரோல் செய்து வரும் நிலையில் வெள்ளை மாளிகை இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. 
பத்திரிகையாளர் மீது இணையவெளி அத்துமீறல்களை ஏற்க மாட்டோம் என்றும் இது ஜனநாயகத்தின் மாண்பை சிதைக்கும் செயல் என்றும் வெள்ளை மாளிகையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்