விஜய் எப்போது அரசியலுக்கு வருவார்? மகளிரணி நிர்வாகியின் கேள்விக்கு புஸ்ஸி ஆனந்த் பதில்

Webdunia
சனி, 9 செப்டம்பர் 2023 (13:36 IST)
சமீபத்தில், விஜய் மக்கள் இயக்கத்தின்  இளைஞரணி ஆலோசனை கூட்டம், வழக்கறிஞர்கள் ஆலோசனை கூட்டம், கேரளா விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  நடைபெற்ற நிலையில்,  இன்று மகளிரணி ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை, பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் இன்று  நடைபெற்று வரும் மகளிரணி ஆலோசனைக் கூட்டத்தில் வி.ம.இ., பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமை வகித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான மகளிர் கலந்துகொண்டுள்ளனர்.

நடிகர் விஜய் ''விஜய்68 ''பட போட்டோஷூட் சம்பந்தமாக அமெரிக்கா  சென்றுள்ள நிலையில் அவரது சொல்லுக்கிணங்க இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருவதாக புஸ்ஸி ஆனந்த் கூறினார்.

மகளிரணி  நிர்வாகிகளின் கேள்விக்கு புஸ்ஸி ஆனந்த் பதிலளித்தார். அப்போது ஒரு நிர்வாகி நடிகர் விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த புஸ்ஸி ஆனந்த், அந்த கேள்விக்கு விஜய் மட்டுமே பதில் சொல்லுவார் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்