ஆப்கன் விமான நிலையத்தில் தண்ணீர் பாட்டில் விலை ரூ.3000?

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (18:31 IST)
ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் விமான நிலையத்தில் தண்ணீர் பாட்டில் ரூபாய் 3000 என்றும் சாப்பாடு ரூபாய் 7000 என்றும் விற்பனையாகி வருவதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தாலிபான்களின் அட்டகாசம் ஆரம்பித்துள்ளதை அடுத்து அந்நாட்டில் உள்ள மக்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர். இந்தியா உள்பட பல நாடுகளுக்கு அகதிகளாக சென்று கொண்டிருக்கும் நிலையில் காபூல் விமான நிலையத்தில் பெரும் கூட்டம் கூடியுள்ளது 
 
இந்த நிலையில் இந்த கூட்டத்தை பயன்படுத்தி அங்கு உள்ள உணவகங்களில் வாட்டர் பாட்டில் ரூபாய் 3000 என்றும் சாப்பாடு ரூபாய் 7000 என்றும் விற்பனையாகி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. காபூல் விமான நிலையத்தில் உணவு தண்ணீர் பாட்டில்களில் விலை விண்ணை முட்டி உள்ளதால் அங்கு உள்ள பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்