தாய்லாந்து செல்ல விசா தேவையில்லை- அரசு அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2023 (12:50 IST)
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்து முக்கிய சுற்றுலாதளங்களில் ஒன்றாக விளங்கிறது.

இந்த நாட்டிற்கு  உலகம் முழுவதிலும் இருந்து, பல சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சினிமா பட ஷூட்டிங்கிற்கும் செல்கின்றனர்.

இந்த நிலையில்,  இந்தியர்கள் தாய்லாந்து செல்வதற்கு விசா தேவையில்லை என்று தாய்லாந்து அரசு  அறிவித்துள்ளது.

அதில்,  தாய்லாந்து நாட்டிற்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா தேவையில்லை ; அடுத்த மாதம் முதல் 2024 ஆம் ஆண்டு மே வரை  நீக்கப்படுகிறது. அதன்படி, இந்தியர்கள் விசா இல்லாமல்  30 நாட்கள் வரை தாய்லாந்தில் தங்க முடியும் என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்