இதனால், தாய்லாந்தில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த 14 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தலில், ராணுவ ஆதரவு பெற்ற கட்சிக்கும், எதிர்க்கட்சிகளாக பார்வர்ட் கட்சியான பியூதாய் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி காணப்பட்டது.
இதன் முடிவில், வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதில், எதிர்க்கட்சிகள்( பியூ தாய் 141 இடங்கள், மூவ் பார்வர்ட் கட்சி 11 இடங்கள்) வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.
எனவே, 9 ஆண்டுகளுக்குப் பின்னர், அந்த நாட்டில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வரவுள்ளது. மேலும், அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் தேர்தல் ஜூலையில் நடைபெறவுள்ளது.