தெற்கு சூடானில் தொடரும் வன்முறை -21 பேர் உயிரிழப்பு

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (23:32 IST)
தெற்கு சூடான் நாட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உள்நாட்டுப் போர் நடந்தது. இதில் 3.8 லட்சம் மக்கள் உயிரிழந்தனர்.

இந்த உள் நாட்டுப் போர் கடந்த 2018 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.   ஆனாலும், அந்த நாட்டில் உள்ள உள் நாட்டு போராட்டக் குழுவினர், வேறு இனத்தவர்களுடன் தொடர்ந்து போரிட்டு வருகின்றனர்.

இதனால், அந்த மொத்த நாட்டும் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த  நிலையில் நேற்று மத்திய ஈக்வேடோரியன் கஜோ கேஜி கவுண்டியில் உள்ள ஒரு முகாமின் மீது, மற்றொரு பிரிவினர் தாக்குதல் நடத்தினர்.

இதில், 21 பேர் மரணமடைந்தனர். இந்த வன்முறையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நாட்டில் அமைதி நிலவ போப் ஆண்டவர் பிரான்ஸிஸ் பிரார்த்தனை மேற்கொள்ளும்படி கேட்டுள்ளார்.

தற்போது போப் ஆண்டவர் பிரான்ஸிஸ் தெற்கு சூடனில் அமைதி பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்