பிடிவாதம் தளர்ந்தது: கொரோனா நிவாரண மசோதாவில் கையெழுத்திட்டார் டிரம்ப்

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2020 (08:07 IST)
அமெரிக்க அதிபர் தேர்தல் சமீபத்தில் நடந்த நிலையில் அந்த தேர்தலில் அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கொரோனா நிவாரண மசோதாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட மறுத்ததாக செய்திகள் வெளி வந்ததால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
இதுகுறித்து அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் ஜோ பைடன் மற்றும் பத்திரிகைகள் ட்ரம்புக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் நிவாரண உதவிகள் குறித்த மசோதாவில் சற்றுமுன் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
அமெரிக்காவில் வேலை வாய்ப்பின்மை பிரச்சனை உள்ளிட்டவற்றை சரி செய்வதற்காகவே இந்த மசோதாவில் கையெழுத்து விடுகிறேன் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனாவால் வேலை இழந்த அமெரிக்க நடுத்தர மக்களுக்கு நிவாரண நிதி ழங்கும் இந்த மசோதாவில் கையெழுத்திட மறுத்து இருந்த அதிபர் டிரம்ப் தற்போது கையெழுத்திட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் 
 
நாடாளுமன்றத்தில் நிறைவேறி ஒரு மசோதாவில் கையெழுத்திட மறுத்து வந்தது டிரம்ப் பெரும் தவறு என அமெரிக்க அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்ததை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்