இந்திய ஊடகங்கள் சூப்பர்.. நாங்க மொக்கையா? – ஜோ பிடனால் கடுப்பான அமெரிக்க ஊடகங்கள்!

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (08:21 IST)
இந்திய ஊடகங்கள் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கூறிய கருத்துக்கு அமெரிக்க ஊடகங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

இந்திய பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்கா சுற்றுப்பயணம் சென்ற நிலையில் அங்கு அதிபர் ஜோ பிடனோடு சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பிறகு இந்திய, அமெரிக்க ஊடகங்களுக்கு பேட்டியளித்த ஜோ பிடன் “அமெரிக்க ஊடகங்களை விட இந்திய ஊடகங்கள் சிறப்பாக செயல்படுகின்றன” என்று கூறியுள்ளார்.

இது அமெரிக்க ஊடகங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விளக்கமளித்துள்ள வெள்ளை மாளிக்கை “அமெரிக்க ஊடகங்களை சிறுமைப்படுத்த அதிபர் அவ்வாறு பேசவில்லை. அன்றைய தினம் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்துதான் அவர் அவ்வாறான பதிலை சொன்னார்” என்று விளக்கமளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்