ஆப்கானிஸ்தான் தூதரகத்தை காலி செய்த அமெரிக்கா; மக்களை மீட்க முயற்சி!

Webdunia
திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (08:38 IST)
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை பிடித்த நிலையில் அமெரிக்க அங்குள்ள தனது தூதரகத்தை காலி செய்துள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் தலீபான்கள் கை உயர தொடங்கியது. ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றிய தலீபான்கள் நேற்று தலைநகர் காபூலையும் கைப்பற்றினர். அதை தொடர்ந்து ஆட்சியை விடுத்து தலைமறைவாகியுள்ளார் அந்நாட்டு அதிபர்.

இந்நிலையில் தலீபான்கள் வசம் ஆப்கானிஸ்தான் உள்ள நிலையில் அங்குள்ள தனது தூதரகத்தை அமெரிக்கா நிரந்தரமாக காலி செய்துள்ளது. முன்னதாக ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்கர்களை திரும்ப அழைக்கப்பட்ட நிலையில் மேலும் இன்னும் யாராவது ஆப்கானிஸ்தானில் சிக்கிக் கொண்டிருந்தால் மீட்பதற்கான முயற்சியையும் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்