எச்1பி விசாவுக்கு நேர்காணல் கிடையாது! – அமெரிக்கா அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (08:23 IST)
அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் எச்1பி விசா வழங்குவதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவிற்கு பணி நிமித்தமாக சென்று தங்கும் வெளிநாட்டினர் மற்றும் அவரது குடும்பங்களுக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் பல்வேறு நடைமுறைகளுக்கு பிறகே விசா கிடைக்க பெறுகின்றனர். அதில் நேரடி நேர்காணலும் ஒன்று.

ஆனால் தற்சமயம் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மோசமாகி வருகிறது. இதனால் கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்த அமெரிக்கா திட்டமிட்டு வரும் நிலையில் எச்1பி மற்றும் குடியுரிமை சாராத விசாக்களுக்கு நேர்காணல் இல்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்