தொல். திருமாவளவனுக்கு நன்றி கூறிய சீமான் !

வியாழன், 23 டிசம்பர் 2021 (22:59 IST)
சமீபத்தில், தர்மபுரி மாவட்டத்தில்  நாம் தமிழர் கட்சியினர் மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது, திமுகவினர் சிலர் ரகளையில் ஈடுபட்டதுடன் ,  திருமிக பிரமுகர் ஒருவர் நாதக நிர்வாகிகள் மீது  நாற்காலிகளையும் தூக்கி வீசி மேடையைக் கலைக்க முற்பட்டனர்.

இது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியினர்    கூட்டத்தில் ரகளையில் ஈடுப்பட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில்,  ரகளையில் ஈடுப்பட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளதற்கு சீமான்  நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், நாம் தமிழர் கட்சியின் மேடையில் அத்துமீறி ஏறி, வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, அரசியல் அநாகரீகத்தை அரங்கேற்றிய திமுக வன்முறைக்கும்பலின் அட்டூழியத்தைக் கண்டித்து நியாயத்தின் பக்கம் நிற்கும் விசிக தலைவர், அண்ணன் முனைவர் @thirumaofficial அவர்களுக்கு எனது அன்பும், நன்றியும்! எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்