ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவரை கொன்ற அமெரிக்க படை!

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (22:00 IST)
சிரியாவில் வடக்குப் பகுதியில் இன்று அமெரிக்க படை வீரரள்  நடத்திய தாக்குதலில் ஐஎஸ். பங்கரவாதிகள் அமைப்பின் தலைவரான அப்த் –அல்ஹாடி மக்மூத் அல் ஹாதி அலி கொல்லப்பட்டார்.

சிரியா, ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்  உள்ளிட்ட  நாடுகளில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தீவிரமாக இயங்கி வருகின்றனர். அவ்வப்போது, பிரிவினை வாத கோஷமெழுப்பி, தீவிரவாத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

.இந்த நிலையில், சிரியா நாட்டின் வடக்குப் பகுதியில் ஆயெஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் அப்த் –அல் ஹாடி  மக்முத் அல் ஹாஜி அலி பதுங்கியிருப்பதாக அமெரிக்காவுக்கு  தகவல் கிடைத்தது.

அங்கு  ஹெலிகாப்டரில் சென்ற அமெரிக்கப் படையினர் குறிப்பிட்ட பகுதியைச் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர்.

இதில், பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் அப்த் –அல் ஹாடி  மக்முத் அல் ஹாஜி அலியை கொன்றதாக அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது.

அப்த் –அல் ஹாடி  மக்முத் அல் ஹாஜி அலி ஐரோப்பாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தத் திட்டமிடும் தலைவராக இருந்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்