பிரான்ஸ் நாட்டில் UPI சேவை தொடக்கம்: பிரதமர் மோடி அறிவிப்பு!

Webdunia
சனி, 15 ஜூலை 2023 (09:31 IST)
பிரான்ஸ் நாட்டிற்கு அரசு முறை சுற்றுப்பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டில் இனி யுபிஐ சேவை தொடங்கப்படும் என்று கூறியுள்ளார். 
 
இந்தியாவில் யுபிஐ சேவையை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் அண்டை நாடுகளிலும் இந்த சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததை. 
 
ஏற்கனவே அரபு நாடுகள் மலேசியா உட்பட பல நாடுகளில் யூபிஐ சேவை பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது பிரான்ஸ் நாட்டிலும் யுபிஐ சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 
 
முதல் கட்டமாக ஈபில் டவருக்கு செல்லும் இந்தியர்கள் இந்திய ரூபாயை கொடுத்து டிக்கெட் வாங்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். பிரான்ஸ் நாட்டில் யுபிஐ சேவை பயன்படுத்த இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன என்றும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த சேவை தொடங்கும் என்றும் இதனால் இந்தியாவிலிருந்து பிரான்ஸ் செல்லும் சுற்றுலா பயணிகள் பயன் பெறுவார்கள் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
 
மேலும் இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே பன்முக ஒத்துழைப்பை வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்