சந்திரயான்-3 நிலவை நோக்கிய பயணத்தைத் தொடங்கிவிட்டது: இஸ்ரோ தலைவர்

வெள்ளி, 14 ஜூலை 2023 (15:37 IST)
சந்திரயான்-3 விண்கலம் சற்றுமுன் வெற்றிகரமாக ஏவப்பட்ட நிலையில் அது நிலவை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கிவிட்டது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். 
 
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பயணத்தைத் விண்கலம் மதியம் சரியாக 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சோமநாத் திட்டமிட்டபடி வெண்கலம் பூமியிலிருந்து அதன் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது என்றும் சந்திராயன் 3 தனது நிலவை நோக்கி பயணத்தை தொடங்கிவிட்டது என்றும் இனி எல்லாம் சரியாக நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
இந்த நிலையில் சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டு உள்ளதை அடுத்து பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் அவர் இது குறித்து கூறியதாவது: சந்திரயான்-3 விண்வெளியில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுகிறது, ஒவ்வொரு இந்தியனின் கனவுகளும், லட்சியங்களும் உயரமாக ,பறக்கிறது, இந்த சாதனை நமது விஞ்ஞானிகளின் அயராத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்று; அர்ப்பணிப்புடன் செயல்பட்ட விஞ்ஞானிகளுக்கு தலைவணங்குகிறேன்"
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்