Cherry-ல் Poison - ரஷ்யா வீரர்களுக்கு ஸ்கெட்ச் போட்ட உக்ரைன் விவசாயிகள்!

Webdunia
சனி, 18 ஜூன் 2022 (09:02 IST)
உக்ரைன் விவசாயிகள் தங்கள் வயலில் விளைந்த செர்ரி பழங்களை விஷமாக்கி ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

 
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 3 மாத காலத்திற்கு மேல் போர் நடத்தி வரும் நிலையில் பல நாடுகளும் இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ரஷ்யாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உலக நாடுகள் பல உக்ரைனுக்கு ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை செய்து வருகின்றன. ஆனாலும் ரஷ்யாவின் கையே ஓங்கியுள்ள நிலையில் சமீபத்தில் உக்ரைனின் டான்பாஸ் நகரத்தை ரஷ்யா கைப்பற்றியது. 
 
இந்நிலையில் போரின் முதல் நாட்களில் இருந்து மெலிட்டோபோல் நகர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மெலிட்டோபோல் நகரத்தில் சுமார் 2,000 ஹெக்டேர் நிலத்தில் பல ஆயிரக்கணக்கான டன்கள் செர்ரி பழங்கள் விளைகின்றன. அங்குள்ள உக்ரைன் விவசாயிகள் தங்கள் வயலில் விளைந்த செர்ரி பழங்களை விஷமாக்கி ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 
 
இதனை ரஷ்யா வீரர்கள் அபகரித்து சென்று உண்டதால் பலருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உக்ரைன் இது ரஷ்யா வீரர்களுக்கான பரிசு என தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்