அணுமின் நிலையத்திற்கு குறிவைத்த ரஷ்யா! மக்கள் போட்ட ப்ளான்!

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (16:26 IST)
உக்ரைனின் கீவ் நகருக்குள் ரஷ்யா நுழைய முயற்சித்து வரும் நிலையில் உக்ரைன் மக்கள் ரஷ்யாவை எதிர்த்து கிளம்பியுள்ளனர்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைன் ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறது. இந்த போரில் உலக நாடுகள் பல உக்ரைனுக்கு நிதியுதவி, ஆயுத உதவி செய்வதாக அறிவித்துள்ளன. உக்ரைனின் பகுதிகளை ரஷ்யா மெல்ல மெல்ல தாக்கி அபகரித்து வருகிறது.

கீவ் நகரில் தாக்குதல் நடத்தி முடித்துள்ள ரஷ்யா அங்கு தன் டாங்கிகள் மற்றும் வீரர்களை அனுப்பியுள்ளது. மேலும் ஸ்போர்ஷியா அணுமின் நிலையத்தையும் ரஷ்யா கைப்பற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் ராணுவம் வர முடியாதபடி டேங்குகள், வாகனங்களை சாலையில் மறைத்து நிறுத்தியுள்ளனர். மேலும் ரஷ்ய படைகளை முன்னேற விடாமல் தாங்களே மனித கேடயமாக திரண்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்