சீனாவிலுள்ள ஒரு வாட்டர் பார்க்கில், உருவாக்கப்பட்ட செயற்கை அலை, பேரலையாக உருவெடுத்ததில் 44 பேர் படுகாயம் அடைந்தனர்.
வடகிழக்கு சீனாவில் அமைந்துள்ள ஷூயுன் வாட்டர் பார்க்கில், மிகப்பெரிய நீச்சல் குளம் ஒன்று உள்ளது, அந்த குளத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்கும்போது, இயந்திரம் மூலமாக செயற்கையான அலையை உருவாக்குவார்கள். இந்நிலையில் ஷுயுன் வாட்டர் பார்க்கில் இன்று செயற்கை அலை உருவாக்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட ஒரு கோளாறால், சுனாமி போல் ஒரு பேரலை எழுந்துள்ளது.
10 அடிக்கு எழுந்த இந்த பேரலையில், நீச்சல் குளத்தில் குளித்துகொண்டிருந்த மக்கள் பலரும் அடித்து வீசப் பட்டார்கள். இந்த விபத்தில் 44 பேர் காயமடைந்தனர். எனினும் இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என கூறப்படுகிறது.