நான் விளையாட்டா சொன்னத நீங்க நம்பிட்டீங்க! – அதிபர் ட்ரம்ப் விளக்கம்!

Webdunia
சனி, 25 ஏப்ரல் 2020 (12:31 IST)
கொரோனாவை கட்டுப்படுத்த சானிட்டைசரை உடலில் செலுத்துவது குறித்து அதிபர் ட்ரம்ப் பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில் அதுகுறித்து ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா பரவி விட்ட நிலையில் அமெரிக்கா உலகளவில் அதிகமான கொரோனா பலிகளையும், பாதிப்புகளையும் கொண்ட நாடாக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் பலரும் பல்வேறு பரிசோதனைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் மருத்துவ நிபுணர்களுடனான உரையாடலில் அதிபர் ட்ரம்ப் “கிருமிநாசினி கொரோனாவை கொல்வதால் அதை மனித உடலில் செலுத்தி சோதிக்க முடியாதா?” என கேள்வி எழுப்பியதாக வெளியான தகவல் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் அதை மருத்துவ குழுவினரை கிண்டல் செய்யும் நோக்கத்தில் பேசினார் என கூறப்படுகிறது.

இதுகுறித்து இணையத்தில் அதிபர் ட்ரம்ப்பை விமர்சித்து பலர் கருத்துகளை பதிவிட்ட நிலையில், அதிபர் ட்ரம்ப் தான் அதை விளையாட்டாகவே கூறியதாக மீண்டும் தெளிவுப்படுத்தியுள்ளார். இருப்பினும் லட்சக்கணக்கில் மக்கள் இறந்துக் கொண்டிருக்கும் நிலையில் அதிபருக்கு விளையாட்டு அவசியமா என பலர் அவரது கிண்டல் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்