மோடியை சந்தித்த பாதுகாப்பு அமைச்சர் நீக்கம்: டிரம்ப் அதிரடி

Webdunia
செவ்வாய், 10 நவம்பர் 2020 (07:57 IST)
சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார் என்பதும் அவருடைய பதவிக்காலம் ஜனவரி மாதத்துடன் முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் என்பவர் இந்தியாவுக்கு வருகை தந்து இந்திய பிரதமர் மோடியை சந்தித்தார். இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் பிரதமர் மோடியை சந்தித்த அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பரை திடீரென பதவியிலிருந்து நீக்கியுள்ளார் டிரம்ப். மேலும் அவருக்கு பதிலாக கிறிஸ்டோபர் மில்லர் என்பவரை அந்த பதவியில் நியமனம் செய்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்திய பிரதமரை சந்தித்து விட்டு அமெரிக்கா திரும்பியுள்ள எஸ்தரை திடீரென டிரம்ப் பதவி நீக்கம் செய்தது ஏன் என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளது. இன்னும் ஒரு மாதம் அமெரிக்க அதிபராக இருக்கப்போகும் டிரம்ப், தான் பதவியை விட்டு விலகுவதற்குள் இன்னும் ஒருசில அதிரடி நடவடிக்கைகளை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்