டிரம்ப்க்கு ஏற்பட்ட கதிதான் பாஜகவுக்கு நேரும் - மெகபூமா முக்தி
திங்கள், 9 நவம்பர் 2020 (23:38 IST)
சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் பெருமளவும் வாக்குகள் பெற்று 46 வது அமெரிக்க அதிபாராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஆனால் முன்னாள் அதிபர் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் நீதிமன்றத்திற்கு செல்வதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் டிரம்புக்கு நடந்தது போன்றுதான் பாஜகவுக்கும் நடக்கப் போகிறது என மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூமா முக்தி தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அஸ்தந்து பறிக்கப்பட்ட போது அவர் வீட்டிறையில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.