ரஷ்யா கதை இதோடு முடிந்தது.. நேட்டோ யார்னு காட்டுவோம்! - ஜோ பைடன் சூளுரை!

Prasanth Karthick
வியாழன், 11 ஜூலை 2024 (09:04 IST)

ரஷ்யா - உக்ரைன் இடையே தொடர்ந்து போர் நடந்து வரும் நிலையில் உக்ரைனுக்கு மேலும் பல அதிநவீன ஆயுதங்களை வழங்க உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் சர்வதேச நேட்டோ அமைப்பில் இணையும் முயற்சிகளில் இருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா, திடீரென உக்ரைன் மீது போரை அறிவித்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைன் நாட்டிற்கு தேவையான மருத்துவ உதவிகள், ராணுவ தளவாடங்களை நேட்டோ அமைப்பை சேர்ந்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வழங்கி வருகின்றன.

இந்நிலையில் நேட்டோ அமைப்பின் 75வது ஆண்டு விழாவையொட்டி வாஷிங்டனில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்துக் கொண்டு பேசினார். அப்போது அவர் “வரும் காலங்களில் அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு கூடுதல் வான் பாதுகாப்பு ஆயுதங்கள் உட்பட பல ஆயுதங்களை வழங்க முடிவு செய்துள்ளன. இதன்மூலம் உக்ரைன் போரில் முன்னோக்கி செல்வது உறுதிப்படுத்தப்படும். இந்த போரில் ரஷ்யா தோல்வி அடைந்து வருகிறது. 2 ஆண்டுகளாக தொடரும் போரில் மூன்றரை லட்சம் ரஷ்யா வீரர்கள் பலியாகியுள்ளனர். 

புதினின் விருப்பத்திற்காக நடத்தப்படும் இந்த போரின் காரணமாக பல லட்சம் இளைஞர்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறியுள்ளனர். ரஷ்யாவில் அவர்களால் எதிர்காலத்தை காண முடியவில்லை. போர் தொடங்கி 5 நாட்களில் உக்ரைனை வீழ்த்தி விடலாம் என புதின் தப்புக்கணக்கு போட்டு விட்டார். இந்த போரில் ரஷ்யா வெற்றி பெறாது. உக்ரைன் வெற்றி பெறும். உலக பாதுகாப்பின் அரணாக நேட்டோ இருக்கிறது” என கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்