அமெரிக்க கைதிகளை விடுவித்ததில் இரானுக்கு பெருந்தொகை செலுத்தப்பட்ட காட்சியை ரகசிய திரைப்படம் ஒன்றில் பார்த்ததாக முன்பு தெரிவித்ததைபோல எந்த திரைப்படத்தையும் பார்க்கவில்லை என்று அமெரிக்க குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் ஏற்றுகொண்டுள்ளார்.
அந்த திரைப்படத்தில் அவர் பார்த்ததாக பல விபரங்களை முன்னதாக அவர் வழங்கியிருந்தார்.
அந்த திரைப்படத்தில் பணம் எடுத்து சென்றதாக கூறப்பட்ட விமானம், உண்மையிலேயே பிணை கைதிகளை ஜெனீவாவுக்கு கொண்டு வந்த விமானம் என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்கர்களை விடுவிக்க இரானுக்கு பெருந்தொகை வழங்கப்பட்டதாக கூறப்பட்டதை அதிபர் பராக் ஒபாமாவும், வெளியுறவு செயலாளர் ஜான் கெர்ரியும் மறுத்திருந்தனர்.
இரானிய புரட்சி காலத்திய தோல்வியடைந்த இராணுவ தளவாட ஒப்பந்தத்தின் பணம் தான் இரானுக்கு வழங்கப்பட்டது என வெள்ளை மாளிகை தெரிவித்தது.