தாலிபான் பயங்கரவாதிகள் 50 பேர் ஆயுதங்களை கைவிட்டு அரசுப்படையினரிடம் சரணடைந்துள்ளனர்.
தாலிபான் பயங்கரவாத அமைப்பு ஆஃப்கானிஸ்தான் நாட்டில் பல பகுதிகளை தங்கள் கட்டுக்குள் வைத்துக் கொண்டு பொதுமக்களுக்கு கொடூர தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
தாலிபான்களை ஒழிக்க அரசு அமெரிக்க படையினரும், அரசுப்படையினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் ஹிரேட், ஹார், பேட் ஹில், ஆகிய மாகாணங்களை சேர்ந்த 50 பேர் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு அரசுப்படையினரிடம் சரணடைந்துள்ளனர். முன்னதாக ஜனவரி மாதம் 500 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சரணடைந்தது குறிப்பிடத்தக்கது.