மனிதர்களை விட்டு தற்போது மீன்கள் வரை: சுவிட்சர்லாந்தில் வியப்பு!!

Webdunia
சனி, 11 நவம்பர் 2017 (14:01 IST)
சுவிட்சர்லாந்த நாட்டை சேர்ந்த நிறுவனம் ஒன்று கடலுக்கு அடியில் சென்று மீன்களுடன் பேசும் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். 


 
 
ஜெனீவாவில் இயங்கும் எல்எஸ்ஆர்ஓ நிறுவன விஞ்ஞானிகள் ஐந்து வருட ஆராய்ச்சிக்கு பின் இதை நிகழ்த்தியுள்ளனர். இந்த ரோபோ மீன் வடிவில் சிறிய அளவிலேயே இருக்கும். 
 
மீன்களை எளிதில் ஏமாற்றும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மீன் ரோபோக்களில் சோலார் மூலம் இயங்கும் மோட்டார்கள் உள்ளன.
 
இந்த ரோபோவால் மீன்களை போன்று நீந்த முடியு. அதோடு இவை டிரான்ஸ்மிட்டர் மூலம் கடலுக்குகடியில் இருந்து தகவலை அனுப்பிக்கொண்டே இருக்கும்.  
 
இந்த ரோபோ கடலுக்குள் சென்று நாம் தெரிவிக்கும் தகவல்களை மீன்களுக்கு புரியும்படி பேசும் திறன் படைத்தவை. இவை கடல் சார்ந்த ஆராய்ச்சிகளில் பெரிய மைக்கல்லாக இருக்கும் என கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்