விமான விபத்தில் இருந்து தப்பித்த 2 பணிப்பெண்கள்.. மயக்கத்தில் இருந்து எழுந்ததும் கேட்ட கேள்வி..

Siva
திங்கள், 30 டிசம்பர் 2024 (11:22 IST)
தென்கொரியாவில் நிகழ்ந்த விமான விபத்தில் இரண்டு பணிப்பெண்கள் மயக்கத்தில் இருந்து எழுந்ததும், "நாங்கள் எங்கே இருக்கிறோம்? என்ன நடந்தது?" என்று கேள்வி கேட்ட நிலையில், அவர்கள் சுயநினைவில் இல்லை என்று மருத்துவர்கள் கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காங் என்ற நகரில் இருந்து 175 பயணிகள் மற்றும் ஆறு விமான ஊழியர்களுடன் 181 பேருடன் தென்கொரியா புறப்பட்ட விமானம், தரையிறங்கும் போது திடீரென தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் 179 பேர் இறந்தனர்.

இந்த விபத்தில் இரண்டு விமான பெண்மணிகள் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், அவர்கள் மயக்கத்தில் இருந்து எழுந்ததும், "என்ன நடந்தது? நாங்கள் ஏன் மருத்துவமனையில் இருக்கிறோம்?" என்று கேள்வி எழுப்பினார்கள்.

அந்த நேரத்தில், மருத்துவர்கள் அவர்கள் இருவரிடமும் விமான விபத்து குறித்து ஞாபகப்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தினர். இரண்டு பேரும் அந்த விபத்தை நினைவுபடுத்த முடியவில்லை என்றும், அவர்கள் தங்கள் சுயநினைவை இழந்து விட்டார்கள் என்றும், அது மட்டும் இன்றி அவர்கள் பயத்தில் இருக்கின்றனர் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் 179 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், உயிர் பிழைத்த இருவரும் சுயநினைவு இல்லாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்