அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: ஆளுநரை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்..!

Siva
திங்கள், 30 டிசம்பர் 2024 (11:20 IST)
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாதிக்கப்பட்ட விவகாரம் குறித்து ஆலோசனை செய்ய தமிழக ஆளுநரை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 1 மணிக்கு ஆளுநர் ரவியை நேரில் சந்திக்க உள்ளார் என்றும் இந்த சந்திப்பை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ளதாகவும் ஆளுநர் ரவியின் ஊடக மற்றும் தகவல் தொடர்பு பிரிவு ஆலோசகராக இருக்கும் திருஞானசம்பந்தம் என்பவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது அண்ணா பல்கலைக்கழக மாணவி பாதிக்கப்பட்ட விவகாரம் குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் அதிமுக தொடர் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது இன்னொரு பக்கம் பாஜக தலைவர் அண்ணாமலை தீவிரமாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் விஜய்யும் இந்த விவகாரத்தில் களத்தில் இறங்குவதால் திமுக அரசுக்கு நெருக்கடி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்