தாய்லாந்தின் பாங்காங்கில் இருந்து புறப்பட்ட ஏர் பிளைட் 2216 என்ற விமானம், 175 பயணிகள் மற்றும் ஆறு விமான ஊழியர்களுடன் தென்கொரியாவுக்கு சென்றது. முவான் என்ற விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, ஓடுபாதையில் இருந்து திடீரென விலகி, சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
அந்த நேரத்தில் 38 பயணிகள் பலியானதாக ஆரம்பகட்ட செய்திகள் தெரிவிக்கப்பட்டன. தற்போது, தென் கொரியாவின் தேசிய தீயணைப்பு நிறுவனம் 120 பேர் பலியாகியுள்ளதாக உறுதி செய்துள்ளது. இன்னும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.