ஜப்பான் நட்டில் திடீர் நில நடுக்கம்..மக்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 14 நவம்பர் 2022 (18:10 IST)
சமீபத்தில், தைவான் உள்ளிட்ட நாடுகளில் நில நடுக்கம் ஏற்பட்ட  நிலையில், இன்று ஜப்பானில் திடீர் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜப்பான்  நாட்டில், டோக்கியோ   உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று திடீர் நில நடுக்கம் உண்டானது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ: ஜப்பான் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி!
 
டோக்கியோ  நகரில் வடக்கில் உள்ள புகுஷிமா, பராக்கி ஆகிய மாகாணங்களிலும் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும்,  இதில், மக்களுக்கு எதுவும் பாதிப்பில்லை என்றாலும்,  புல்லட் ரயில்களும், மெட்ரோ உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் சிறிது நேரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், இந்த நில நடுக்கம் தொடர்பாக சுனாமி எச்சரிக்கை விடவில்லை என்று தகவல் வெளியாகிறது. 

 Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்