விண்ணில் ஏவப்பட்ட எலான் மஸ்க் நிறுவனத்தின் ராக்கெட்.. சில நிமிடங்களில் வெடித்து சிதறியதால் பரபரப்பு..!

Siva
வெள்ளி, 7 மார்ச் 2025 (08:47 IST)
எலான் மஸ்க் அவர்களுக்கு சொந்தமான ஸ்டார்ஷிப் நிறுவனத்தின் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், அந்த ராக்கெட் சில நிமிடங்களில் வெடித்து சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்டார்ஷிப் நிறுவனத்தின் ராக்கெட் ஏவும் காட்சி நேரடி ஒளிபரப்பப்பட்ட நிலையில், ஏவப்பட்ட சில நிமிடங்களில் அதன் முக்கிய இயங்கிகள் செயலிழந்ததால்,   வான் பகுதியில் வெடித்து சிதறியது. இதன் காரணமாக மியாமி உள்ளிட்ட விமான நிலையங்களிலும் தரைவழி போக்குவரத்திலும் தற்காலிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஸ்டார்ஷிப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராக்கெட் திட்டமிடாத பிரிதலை எதிர்கொண்டதாகவும், அதனால் ராக்கெட் மிஷின்களுக்கு இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும், இதனால் ராக்கெட் வெடித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட் தோல்விக்கான காரணத்தை கண்டுபிடித்து, அடுத்த ராக்கெட்டில் சரி செய்வோம் என்றும், நாம் கற்றுக்கொள்கிற அனைத்திலிருந்தும் வெற்றியை நோக்கிச் செல்வோம் என்றும் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ஷிப் ராக்கெட் வெடித்து சிதறிய காட்சியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்