சமூக வலைதளங்களில் பல வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில் நாடாளுமன்றத்தில் எலி புகுந்த வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல வீடியோக்கள் வெளியாகி ட்ரெண்டாகி வருகின்றன. அந்த வகையில் ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் எலி புகுந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் வழக்கமான அலுவல்ரீதியான ஆலோசனை கூட்டம் நடந்து வந்தது. அப்போது திடீரென எலி ஒன்றை கண்டு பெண் எம்.பி ஒருவர் கத்த அதை தொடர்ந்து பீதியடைந்த சிலர் இருக்கையை விட்டு ஓடினர். மேலும் சிலர் எலி எங்கே என தேடினர். சிறு எலியால் நாடாளுமன்ற கூட்டம் சிறிது நேரம் ஸ்தம்பித்த வீடியோ வைரலாகியுள்ளது.
WATCH: A rat interrupts Andalusia's parliament session in Spain