உச்சத்தில் கொரோனா; ஊரடங்கை தளர்த்தும் அரசு! – தென்கொரியாவில் அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (09:07 IST)
தென் கொரியாவில் கொரோனா உச்சமடைய தொடங்கியுள்ள நிலையில் அரசு ஊரடங்கை தளர்த்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இதனால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வபோது கொரோனா பாதிப்புகள் குறைந்தாலும், புதிய வேரியண்டுகள் உருவாகி மேலும் பாதிப்பை அதிகரிக்க செய்து வருகின்றன.

தற்போது தென்கொரியாவில் கொரோனா பாதிப்பு உச்சமடைய தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் 6.21 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 429 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் தென்கொரியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. கட்டுப்பாடுகள் காரணமாக சரிந்த பொருளாதாரத்தை மீட்க இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்