சைபீரிய வணிக வளாக தீ விபத்து; பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு

Webdunia
செவ்வாய், 27 மார்ச் 2018 (11:44 IST)
ரஷியாவின் சைபீரியா மாகாணத்தில் உள்ள ஷாப்பிங் மாலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில்  சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.
ரஷியாவின் சைபீரியா மாகாணத்தில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில் பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தனர். யாரும் எதிர்பாரா விதமாய் திடீரென அந்த மாலில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு குவிந்திருந்த மக்கள் அலறியடித்தபடி அங்குமிங்கும் ஓடினர். 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், 12 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவத்தில் தற்பொழுது வரை 64 பேர் உயிரிழந்துள்ளதவும், பலரது நிலைமை கவலைகிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சைபீரியாவில் ஏற்பட்ட தீ விபத்துகளில் மோசமான தீ விபத்தாக இந்த விபத்து கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்