கர்நாடகா சட்டசபைக்கு மே 12 ம் தேதி தேர்தல்

Webdunia
செவ்வாய், 27 மார்ச் 2018 (11:29 IST)
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 
கர்நாடக மாநிலத்தின் தற்போதைய சட்டமன்ற காலம் வரும் மே மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில் சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன.
 
இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் தேதியை, இந்திய தேர்தல் ஆணையம் இன்று காலை 11 மணிக்கு அறிவிக்கும் எனக் கூறப்பட்டது. அதன்படி, தலைமை ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் டெல்லியில் தற்போது பேட்டியளித்து வருகிறார். அப்போது, கர்நாடக சட்டசபையில் 224 பேரவை தொகுதிகளுக்கும்  ஒரே கட்டமாக வருகிற மே 12ம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என அறிவித்தார். மேலும், வேட்பு மனு தாக்கல் ஏப் 17ம் தேதி எனவும்,  மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார். 
 
மேலும், மின்னணு இயந்திரங்களுடன் யாருக்கு ஓட்டளித்தோம் என்பற்கான விவிபிடி இயந்தியம் இணைக்கப்படும். தேர்தல் விதிமுறைகளை மீறாமல் தடுக்க கண்காணிப்புக் குழுக்கள், பறக்கும் படைகள் அமைக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்குரிமையை செலுத்த ஏற்பாடுகள் செய்யப்படும். வாக்குச்சீட்டு விவரங்கள் கன்னட மொழியிலும் அச்சடிக்கப்பட்டிருக்கும். புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சீட்டு ஒரு வாரத்துக்கு முன்பே வாக்களர்களுக்கு வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்