சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

Mahendran

புதன், 26 ஜூன் 2024 (13:14 IST)
வன்னியர் 10.5% உள் ஒதுக்கீடு குறித்து பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறி அவையில் இருந்து பா.ம.க வெளிநடப்பு செய்தனர்.
 
பா.ம.க எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக சட்டப்பேரவையில் பேசினார். வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக மூன்று ஆண்டுகளாக பேசுகிறோம், ஆனால் பலனில்லை. அதேபோல் மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறி தமிழக அரசு காலம் தாழ்த்துகிறது.
 
இடைத்தேர்தல் ஒட்டி தொகுதியில் அமைச்சர்கள் ஒரு கருத்து பேசுகின்றனர், பேரவையில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று பா.ம.க எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் பேசினார்.
 
இந்த நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அவையில் இருந்து பா.ம.க வெளிநடப்பு செய்தனர்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்