கடந்த வெள்ளிக்கிழமை அன்று, இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்குள் பெண் ஒருவரை வாலிபர் ஒருவர் கற்பழித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக 23 வயதான சாம் ஆண்டர்சன் என்பவரை லண்டன் காவல்துறையினர் கைது செய்தனர். இவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியாளர் என்றும், பாராளுமன்ற வளாகத்திற்குள் செயல்படும் அலுவலகம் ஒன்றிற்குள் இச்சம்பவம் அரங்கேறியது என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர்.
இதை அடுத்து, அந்த அலுவலகத்திற்கு மட்டும் சீல் வைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சாம் ஆண்டர்சன் தற்போது பிணையில் வெளிவந்துள்ளார். இவர் முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமெரூன் உடன் எடுத்துக்கொண்டப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.