அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வரும் நிலையில், முதல் உத்தரவாக அமெரிக்காவில் ஆண், பெண் என இரண்டு பாலினங்கள் மட்டுமே என்ற உத்தரவை பிறப்பித்தார். இதனால் மாற்று பாலினத்தவர்கள் உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது திருநங்கைகள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கான தடை விதிக்கப்படும் என்று கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆண்களை பெண்களுக்கான விளையாட்டு போட்டிகளில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், திருநங்கைகள் இனி பெண்கள் விளையாட்டு போட்டியில் விளையாட தடை விதிக்கும் உத்தரவை இன்று அவர் பிறப்பிப்பார் என்றும் கூறப்படுகிறது.