கொரோனா வைரஸ் பூமிக்கு எப்படி வந்தது?

Webdunia
வெள்ளி, 13 மார்ச் 2020 (18:29 IST)
கொரோனா நோய் தொற்றுக்கு சீனா மீது விழுந்த விண்கல்லே காரணம் என தகவல் வெளியாகி வருகிறது. 
 
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,972 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,34,559 ஆக உள்ளது. 
 
கொரோனா சீனாவின் வூகான் நகரின் இருந்து பரவ துவங்கியது. ஆனால் இந்த வைரஸ் எப்படி வந்தது என்பது இதுவரை தெரியவில்லை. இந்நிலையில், பக்கிங்ஹாம் விண் உயிரியல் மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் சந்திர விக்கிரமசிங்கே, கொரோனா வைரஸ் விண்கல்லின் இருந்து வந்திருக்க கூடும் என பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். 
 
இது குறித்து அவர் கூறியதாவது, கொரோனா நோய் தொற்றுக்கு சீனா மீது கடந்த அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி விழுந்த விண்கல்லே காரணம் என்று கூறியுள்ளார். ஆனால் இவரது கூற்றை நோய்த்தொற்று வல்லுநர்கள் மறுத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்