உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்ய மக்கள்! – சொந்த மக்களை கைது செய்யும் ரஷ்யா!

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (10:21 IST)
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ள நிலையில் அதை கண்டித்து ரஷ்ய மக்களே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைனில் பல நாட்டு மக்களும் சிக்கியுள்ள நிலையில் பலர் அண்டை நாடுகளான லிதுவேனியா, லாட்வியா, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பி சென்று அங்கிருந்து சொந்த நாடுகளுக்கு செல்கின்றனர்.

இந்நிலையில் ரஷ்யா தொடர்ந்துள்ள இந்த போருக்கு ரஷ்ய மக்களே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ரஷ்ய அதிபர் புதினை கண்டித்து நேற்று மாஸ்கோ, பீட்டர்ஸ்பர்க் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நேற்று மட்டும் 2 ஆயிரம் பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 4 நாட்களில் புதினுக்கு எதிராக போராட்டம் நடத்திய 5,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்