சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து விலகும் ரஷ்யா!

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2022 (19:52 IST)
உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான ரஷ்யா சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துவருகிறது. இந்த தாக்குதல் தொடர்ந்து 150 நாட்களைத் தாண்டியுள்ள நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு பொருளாதாரத் தடை விதித்துள்ளன. ஆனால், இதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ரஷ்யா போரிட்டு வருகிறது.

இந்த  நிலையில்,அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் காரணமாக சர்வதேச விண்வெளி மையத்தில் ரஷியாவின் ஒத்துழைப்பை பாதிக்கும் என ரஷிய விண்வெளி ஆய்வு நிறுவனமாக ரோஸ்கோஸ்மாஸ் எச்சரித்தது.

இந்த நிலையில், சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து ரஷியா விலகுவதாக அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் இந்த அறிவிப்பு உலக நாடுகள் இடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்