ரஷிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக 600 உக்ரைன் வீரர்களை ரஸ்யா கொன்று குவித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
உக்ரைன் மீது ரஷிய ராணுவம் போர்தொடுத்து 11 மாதங்கள் ஆகிறது. இதுவரை பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால் இன்னும் போர் நடந்து வருகிறது.
இந்த நிலையில், கிரிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு, ரஷிய அதிபர் புதின் அறிவித்த 36 மணி நேரம் போர் நிறுத்த நேற்று முன் தினம் நள்ளிரவுடன் நிறைவடைந்தது.
இந்த நிலையில், உக்ரைன் தலைநகர் கிவ் அருகிலுள்ள மஹூல்லா நகரில் உக்ரைன் வீரர்கள் தாக்குதல் நடத்தியதில் ரஷிய வீரர்கள் 89 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்குப் பதிலடியாக ரஷியா வீரர்கள் தாக்குதல் நடத்தினர்., இதில், 600க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் உயிரிழந்ததாக ரஷியா கூறியுள்ளது. இதை உக்ரைன் அதிகாரிகள் மறுத்துள்ளனர்