ரஷியா ஒரு பயங்கரவாத நாடு....உக்ரைன் கடும் விமர்சனம்

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (22:07 IST)
ரஷியா ஒரு பயங்கரவாத நாடு என நிரூபித்துள்ளதாக உக்ரைன் கடுமையாக விமர்சித்துள்ளது.
 

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் ஏழரை மாதமாகத் தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது என்பதும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் நான்கு உக்ரைன் நகரங்களில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நான்கு நகரங்களையும் ரஷ்யாவுடன் இணைக்க சமீபத்தில் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்ட நிலையில் 96 சதவீதம் பேர் ரஷ்யாவுடன் இணைக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்

இதனை அடுத்து இந்த நான்கு நகரங்களும் விரைவில் ரஷ்யாவுடன் அதிகாரபூர்வமாக இணைக்கப்படும் என்ற தகவல்வெளியானது.

இந்த நிலையில், கிவியிலலிருந்து ரஷிய படைகள் பின்வாங்கிய நிலையில், உக்ரைன், ரஷிய பாலத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல்  நடத்தியது. இதையடுத்து, ஆக்ரோசமான ரஹியா, ஒரு நாளில் 84 ஏவுகணைகளை வீசிதாக்குதல் நடத்தியது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். 97 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக ஐ நா சபை அவரசக் கூட்டம் கூட்டியது. அதில், உக்ரைனின் 4 பகுதிகளை இணைந்துக்கொண்டது தொடர்பாக ஐ நா கூட்டத்தில் விவாதிக்கபப்ட்டது. அப்போது, உக்ரைன் தூதர், உறங்கிக் கொண்டிருக்கும் மக்கள் மீதும், பள்ளி செல்லும் குழந்தைகள் மீதும்  ரஷியா ஏவுகணை தாக்குதல்    நடத்தியுள்ளதன் மூலம் அது  பயங்கரவாத நாடு என்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்